• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் மீள அழைப்பு

இலங்கை

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் நாட்டிற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளனர்

துபாயில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இந்நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை பொலிஸாரின் அறிவிப்பின் அடிப்படையில், இன்டர்போல் அந்த சந்தேக நபர்களுக்கு சிவப்பு அறிவிப்பும் பிறப்பித்திருந்தது.

இதேவேளை மூன்று சந்தேக நபர்களும் இன்று UL-226 விமானத்தில் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படமை குறிப்பிடத்தக்கது
 

Leave a Reply