• Welcome to TamilsGuide
செய்திகள் 1

களுத்துறையின் நான்கு பகுதிகளுக்கு நீர் வெட்டு

இலங்கை

களுத்துறையின் நான்கு பகுதிகளுக்கான நீர் விநியோகமானது தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

களுத்துறையில் மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த இடையூறு நாளை (7) காலை 8,00 மணி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேவைகள் சீராகும் வரை, கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 

Leave a Reply