ரொறன்ரோவில் சீரற்ற காலநிலை குறித்து எதிர்வுகூறல்
கனடா
கனடாவின் ரொறன்ரோவில் சீரற்ற காலநிலை தொடர்பில் எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது.
நாளைய தினம் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் பனிப்பொழிவு மற்றும் பனி மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் முகவர் நிறுவனம் இந்த எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளது.
நாளைய தினம் இரவு வேளையில் சில சென்றி மீற்றர் அளவிற்கு பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஈரப்பதனின் அளவு காரணமாக ரொறன்ரோவின் வெப்பநிலை மறை 12 பாகை செல்சியஸ் அளவில் உணரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் அதிகாலை 5.00 மணி முதல் பனிப்பொழிவு நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.























