• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடாளுமன்றத்தில் பணம் செலுத்தி உணவருந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற  சிற்றுண்டிச்சாலையில் தாம் உட்கொள்ளும் உணவுக்காக 2,000 ரூபாவினைச் செலுத்தும் தீர்மானம் இன்று (05) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அவைக் குழு எடுத்த முடிவைத் தொடர்ந்து,  இத்தீர்மானம் அமுல்படுத்தப்பட்டது.  அதன்படி, காலை உணவு 600 ரூபாய்க்கும், மதிய உணவு 1200 ரூபாய்க்கும், மாலை தேநீர் 200 ரூபாய்க்கும் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவு கடந்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்தாலும், நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில், இன்று அது செயற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply