• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சித்தார்த்தின் 40-வது ஆவது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகிறது

சினிமா

சித்தார்த்தின் 40 ஆவது திரைப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தலைப்பு இன்னும் வைக்கப்படவில்லை.

இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் சரத் குமார், தேவயாணி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். அம்ரித் ராம்நாத் கடந்தாண்டு வெளியான வருஷங்களுக்கு சேஷம் என்ற மலையாள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சித்தார்த்தின் 40-வது ஆவது படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
 

Leave a Reply