• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வைபவ் நடித்த ஆலம்பனா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சினிமா

கே.ஜெ.ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் கொஸ்துப் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டசி காமெடி கதையம்சம் கொண்ட படமாக ஆலம்பனா உருவாகி இருக்கிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் உருவாகி இருக்கும் ஆலம்பனா திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகும் என படக்க்ழூ போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் ஒரு நகைச்சுவை கலந்த ஃபேண்டசி திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் வைபவுடன் காளி வெங்கட், முனிஸ்காந்த், ரோபோ ஷங்கர், திண்டுக்கல் லியோனி, ஆனந்த்ராஜ், மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் இசையை ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
 

Leave a Reply