• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாமலின் மக்கள் சந்திப்பு இன்று ஆரம்பம்

இலங்கை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில், நாடளாவிய ரீதியில் ”“நாமலுடன் கிராமம் கிராமமாக” என்ற தொனிப் பொருளில் பொதுமக்கள் சந்திப்பொன்றை  முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த மக்கள்சந்திப்பு  இன்று (2) அநுராதபுரம் நொச்சியாகம பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் ஜெய ஸ்ரீ மகா போதி அருகே மத வழிபாடுகளை நிகழ்த்திய பின்னர் இந்த திட்டம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply