மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜீவன் இறுதி அஞ்சலி
இலங்கை
இறைபதமடைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இ.தொ.கா பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
காங்கேசந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று முற்பகல் சென்று மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்திய ஜீவன் தொண்டமான், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டார்.