ஷாம் நடித்துள்ள அஸ்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு
சினிமா
நடிகர் ஷாம் அடுத்ததாக அஸ்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தின் ஷாம் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவருடன் நிழல்கள் ரவி, அருல் தி சங்கர்,ஜீவா ரவி மற்றும் ரஞ்சித் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தன ஷண்முகமணி தயாரித்துள்ளார். இப்படத்தின் இசையை சுந்தரமூர்த்தி மேற்கொண்டுள்ளார். இவர் இதற்கு முன் ஐடா, 8 தோட்டாக்கள் மற்றும் பொம்மை நாயகி படங்களின் இசையமைப்பாளர் ஆவார்.
இப்படம் ஒரு இன்வெஸ்டிகேஷன் கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. ஒரு சீரியல் கில்லர் தொடர் கொலைகளை செய்து வருகிறார். அவரை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் ஷ்யாம் ஈடுப்படுகிறார். ஆனால் அவருக்கு எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் தவிக்கும் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. படத்தின் மீது எதிர்ப்பார்ப்பை மக்களிடம் தூண்டியுள்ளது படத்தின் டீரெய்லர். இப்படம் ஷ்யாமிற்கு ஒரு வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.