• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மண்டூர் – களுவாஞ்சிக்குடி இடையே பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

இலங்கை

மண்டூர் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரை இடம்பெற்று வந்த இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவை இன்றுமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மண்டூர் பகுதியிலிருந்து இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவையானது, 1976 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்று வந்த நிலையில், கடந்த 7 வருடங்களாக இது இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்த போக்குரவத்தை மீண்டும் ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி மக்கள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனிடம் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

அதற்கிணங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் இதுவிடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

மண்டூர் பகுதி வாழ் மக்கள் மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து நடைபெற்று வரும் குருமண்வெளி – மண்டூர் படகுப் பதையில் பயணம் செய்து களுவாஞ்சிகுச் சென்று பின்னரே அங்கிருந்தே மட்டக்களப்பு நகர்ப்பகுதிக்குச் சென்று வருந்துள்ளனர்.

இந்நிலையில் தடைப்பட்டிருந்த இந்த போக்குவரத்துசேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டள்ளமையால் அவர்கள் தங்களின் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், இலங்கை போக்குவரத்து சபையின் களுவாஞ்சிகுடி சாலை முகாமையாளர் கோகுலவேந்தன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a Reply