• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

இலங்கை

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட ஆளும் தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது

குறித்த கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்

இதேவேளை இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்வதற்கான 20 முக்கிய விடயங்களை உள்ளடக்கிய விடயதானங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபனுக்கு வழங்கியுள்ளார்

மேலும் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பிரதேசத்திலும், பிற்பகல் 3.30 மணிக்கு சாவகச்சேரி பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் இரு சிநேகபூர்வ சந்திப்புகளிலிலும் ஜனாதிபதி இணைந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
 

Leave a Reply