துயர் பகிர்வு - More
-
திரு வர்ணராஜன் இராஜரட்ணம் Scarborough -
திருமதி மல்லிகாதேவி தில்லைநாதன் Sri Lanka -
திரு கணேசலிங்கம் பெருமைனார் Toronto -
திருமதி குணரத்னம் நாகேஸ்வரி Sri Lanka -
திருமதி நாகேஷ்வரி குணரட்னம் Germany -
திரு திருநாவுக்கரசு தவேந்திரன் Montreal -
திருமதி இரத்தினசபாபதி செல்லம்மா Mississauga -
திருமதி செளந்தரம் வினாயகமூர்த்தி Markham -
திரு பரமு கனகையா Sri Lanka -
திரு தனபாலசிங்கம் மகிந்த் Sri Lanka
Click More Thuirpakirvu

சமுத்திரகனி நடித்த ராமம் ராகவம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா
சின்னதிரையில் இயக்குனராக அறிமுகமாகிய சமுத்திரக்கனி அதற்கடுத்து நாடோடிகள் படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து போராளி, நிமிர்ந்து நில், அப்பா, நாடோடிகள் 2 என பல படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சுப்பிரமணியபுரம், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இவர் அப்பா, தலைக்கூத்தல், ஆண் தேவதை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.
தற்பொழுது தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வில்லன் நடிகர்களுள் சமுத்திரக்கனியும் ஒருவர். சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து இருந்தார். தமிழில் திரு. மாணிக்கம் மற்றும் ராஜா கிளி திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம்' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகியுள்ளது.
திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.