• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் இரத்த தான நிகழ்வு

இலங்கை

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இரத்தான நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

வவுனியா சமுதாயப் பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் வவுனியா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதித் தேவையை முன்னிட்டு குறித்த இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது சமுதாய பொலிஸ் குழு அங்கத்தவர்கள், பொலிசார், பாதுகாப்பு தரப்பினர், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இராத்ததானம் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சமுதாய பொலிஸ் குழு பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a Reply