• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காற்றின் தர மோசமான நிலை படிப்படியாக குறையும் சாத்தியம்

இலங்கை

நாட்டின் நகர்ப்புறங்களில் காற்றின் தரத்தின் மோசமான நிலை இன்று (30) முதல் படிப்படியாக குறையும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளின் வளிமண்டலத்தில் வளிமண்டலத்தில் பனிமூட்டம் போன்ற அசாதாரண சூழ்நிலை நிலவுவதற்கு காற்றின் தரம் குறைவே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா உட்பட பல தெற்காசிய நாடுகளில் இந்த நாட்களில் காற்றின் தரம் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி நேற்று (29) இலங்கையில் காற்றின் தர சுட்டெண் 86 க்கும் 116 க்கும் இடையில் இருந்தது.

இதேவேளை, தற்போதைய காற்றின் தரம் காரணமாக சுவாசக் கோளாறு உள்ளவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Leave a Reply