• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு கட்சியின் கொடி போர்க்கப்பட்டு அஞ்சலி

இலங்கை

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்க்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது

இதேவேளை மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82 வது வயதில் நேற்று இரவு (29) உயிரிழந்துள்ளார்.

மேலும் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என தெரியவருகின்றது.
 

Leave a Reply