• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நிலையான நிலையில் மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாடு

இலங்கை

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (28) நடைபெற்ற அதன் கூட்டத்தில் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை தற்போதைய நிலையில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஓரிரவுக் கொள்கை வீதத்தினை (OPR) 8.00 சதவீதமாக பேணுவதற்கு தீரமானிக்கப்பட்டுள்ளது.

நாணயக் கொள்கை என்பது விலை உறுதிப்பாட்டை அடையும் முக்கிய நோக்குடன் பொருளாதாரமொன்றிலுள்ள பணத்தின் நிரம்பல் மற்றும் செலவை (பண நிரம்பல்/ திரவத்தன்மை) மத்திய வங்கி முகாமைப்படுத்தும் செயன்முறையாகும்.
 

Leave a Reply