• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுதந்திர தினத்தைக் கொண்டாட்டம் - விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்

இலங்கை

இலங்கையின் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கான ஒத்திகைகள் காரணமாகச் சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் இன்று முதல் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கருவாத்தோட்டம் – விஜேராம மாவத்தையிலிருந்து வித்யா மாவத்தைக்கான நுழைவாயில், பௌத்தாலோக மாவத்தையிலிருந்து மைட்லேண்ட் பிளேஸுக்கான நுழைவாயில், ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையிலிருந்து இலங்கை மன்ற கல்லூரி வீதிக்கான நுழைவாயில் ஆகியன தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

77 ஆவது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கான ஒத்திகை காலத்தில் ஹோட்டன் பிளேஸில் இருந்து சுதந்திர சதுக்கம் ஊடான மைட்லேண்ட் பிளேஸுக்கான நுழைவாயில் மூடப்படும் என்றும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அந்தப் பகுதியில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வருகைதரும் வாகனங்கள் ஒத்திகையினை பாதிக்காத வகையில் பயணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply