• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனியமணல் அகழ்வு - மன்னார் மக்கள் எதிர்ப்பு

இலங்கை

மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவத்தினால் முன்னெடுக்கப்படும் மின்திட்டம் தொடர்பாக அரசாங்கம் புதிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு வரும் நிலையில், இதுதொடர்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற  மன்னார் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது  மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கனியமணல் அகழ்வுக்கும் பிரதேச மக்களால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. மன்னார் மாவட்ட அரச அதிபர் கனகேஸ்வரன் ஏற்பாட்டில் பிரதியமைச்சரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவின் தலைமையில் இக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது அதானி நிறுவனத்தின் 2 ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. மேலும் மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கணிய மணல் அகழ்வு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

எனினும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட மன்னார் பிரஜைகள் குழு மற்றும் மீனவ அமைப்புக்களின் பிரதி நிதி ஆகியோர் தமது கடுமையான எதிர்ப்பை முன்வைத்திருந்தனர்.

நேற்றைய கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன், காதர் மஸ்தான், ரவிகரன், சத்தியலிங்கம், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன், முத்து முஹமட் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply