போலி வேலை மோசடி தொடர்பில் எச்சரிக்கை
இலங்கை
“தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு” என்ற வாசகத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் விளம்பரம் தொடர்பில் அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பகுதி நேர வேலை என குறிப்பிடப்பட்டுள்ள இந்த விளம்பரத்தின் மூலம் தினமும் 5000 ரூபாய் வருமானம் ஈட்ட முடியும் என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஆன்லைன் மூலம் நேர்காணல் நடத்தி நாளாந்தம் அந்த தொகை வழங்கப்படும் என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே, அமைச்சு மற்றும் அதன் வாசகத்தைப் பயன்படுத்தி அல்லது அரச சின்னத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விளம்பரம் முற்றிலும் போலியானவை என்று தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
அவ்வாறான எந்தவொரு விளம்பரத்தையும் அமைச்சு வெளியிடவில்லை என்றும் அமைச்சின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.