• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளின் வரிசையில் கனடாவின் நிலை

கனடா

 உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளின் வரிசையில் கனடாவிற்கு ஏழாம் இடம் கிடைக்க பெற்றுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு சுட்டென் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உலகில் சக்தி வாய்ந்த கடவு சீட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உலகின் பலம் பொருந்திய கடவுச்சீட்டு கொண்ட நாடுகள் வரிசையில் கனடா பின்னடைவை சந்தித்துள்ளது.

கடந்த ஒரு தசாப்த கால இடையில் உலகின் பலம் பொருந்திய கடவுச்சீட்டை வரிசையில் கனடிய கடவுச்சீட்டு நான்காம் இடத்தை வகித்து வந்தது.

எனினும் தற்பொழுது மூன்று இடங்கள் பின் தள்ளப்பட்டு ஏழாம் இடத்தினை வகிக்கின்றது. கனடாவுடன், மால்டா மற்றும் போலந்து ஆகிய நாடுகளும் ஏழாம் இடத்தை வகிக்கின்றன.

கனடிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி உலகில் 188 இடங்களுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தர வரிசையில் சிங்கப்பூர் முதல் இடத்தையும், ஜப்பான் இரண்டாம் இடத்தையும், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி தென்கொரியா, ஸ்பெயின் ஆகிய நாடுகள் மூன்றாம் இடத்தையும், ஆஸ்திரியா நான்காவது இடத்தையும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


 

Leave a Reply