• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை ஹனி ரோஸ் பாலியல் புகார் எதிரொலி- கேரள தொழிலதிபர் கைது

சினிமா

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை ஹனிரோஸ். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் 'முதல் கனவே', 'சிங்கம்புலி', 'காந்தர்வன்', 'பட்டாம்பூச்சி', 'மல்லுக்கட்டு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதற்கிடையே, கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஹனி ரோஸ் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக ஹனி ரோஸ் தனது சமூக வலைதளத்தில் இந்த குற்றச்சாட்டை வெளியிட்டார். அதில், கேரள தொழிலதிபர் தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், தனது உடல் அமைப்பை குறிப்பிட்டு ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார். தனக்கு தொல்லை கொடுக்கும் தொழிலதிபர் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுப்பேன் என பதிட்டிருந்தார்.

சமூக வலைதளங்களில் நடிகை ஹனிரோஸ் தெரிவித்த இந்தக் குற்றச்சாட்டு மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில் கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைதுசெய்தனர்.

பாபி செம்மனூர் நகை வியாபாரம் செய்து வரும் செம்மனூர் குழுமத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply