• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

இலங்கை

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்பட உள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply