• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடமைகளை பொறுப்பேற்றார் திருகோணமலை அரசாங்க அதிபர்

இலங்கை

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையையின் விசேட தர அதிகாரி டபிள்யு. ஜி. எம். ஹேமந்த குமார நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

2003.09.02 ம் திகதி இலங்கை நிருவாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட இவர் தெஹியத்தகண்டிய உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலாளர், மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சின் உதவி செயலாளர், மத்திய மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர்,மத்திய மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர்( பதில் கடமை), ஹதரலியத்த மற்றும் தும்பன பிரதேச செயலாளர் ஆகிய பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.

அரசாங்க அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட முன்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக இவர் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply