• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொடிகாமத்தில் கையெழுத்து போராட்டம்

இலங்கை

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப் போராட்டம் மூன்றாம் நாளான இன்று கொடிகாமம் பேருந்துத் தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெற்றதுள்ளது

இந்த கையெழுத்துப் போராட்டத்திற்கு கொடிகாமம் பகுதி மக்கள் ஆதரவளித்து கைழுத்துக்களை வைத்துள்ளனர்

இதேவேளை விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து மாவீரர் தினத்தில் தமது பிள்ளைகளுக்கான நினைவேந்தலை சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கையெழுத்து போராட்டமும் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
 

Leave a Reply