திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம்
இலங்கை
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் கடந்த 06.01.2025 மாலை தொல்லியல் திணைக்களத்தினால் “1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு பதாகை ஒன்று நடப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் எவ்வளவு பகுதி தொல்லியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது? அதற்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா? எதிர்காலத்தில் அப்பகுதியில் புத்த விகாரை வருமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது எனும் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
வெருகல் வட்டவன் பகுதியில் இருந்து வெருகல் பிரதேச செயலகம்வரை ஆர்ப்பாட்டப் போரணியாக ஒன்று திரண்ட மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர்.
கடந்த 28.12.2024 அன்று இரவோடு இரவாக குச்சவெளி பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் பதாகை நடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தினை நடத்த ஆயத்தமான நிலையில் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுந்த பதாதையானது அகற்றப்பட்டிருந்தது.
மேலும் கோரிக்கைகள் அடங்கிய மஹஜர் ஒன்றும் வெருகல் பிரதேச செயலாளர் எம் ஏ அனஸ் அவர்கலிடம் கையளிக்கப்பட்டது. குறித்த சந்தர்ப்பத்தில் தொல்பொருள் திணைக்கபளத்தின் வெருகல் பகுதி பொறுப்பதிகாரி அவர்களும் பங்கேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.