• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தளபதி 69-இல் இணைந்த அசுரன் நடிகர் - வெளியான புது அப்டேட்

சினிமா

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "தளபதி 69" என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இது நடிகர் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், தளபதி 69 படத்தில் டிஜே நடிக்கிறார். இந்தப் படத்தில் மமிதா பைஜூவுக்கு ஜோடியாக டிஜே நடிக்கிறார். இதை டிஜே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "நான் மமிதா பைஜூவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். இந்த வாய்ப்பு கிடைத்த போது எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. இது நடிகர் விஜய்யின் கடைசி படம், இத்தகைய வாய்ப்பை யார் வேண்டாம் என்பார்கள்? நான் சிறு வயது முதலே அவரது அனைத்து படங்களையும் பார்த்து, ரசித்திருக்கிறேன். அவருடன் நடிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது," என்று தெரிவித்தார்.

முன்னதாக இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் கூட்டணியில் வெளியான அசுரன் படத்தில் டிஜே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 
 

Leave a Reply