பான் இந்தியா படத்திற்காக பெரிய நிறுவனத்துடன் இணையும் இயக்குநர்
சினிமா
பான்-இந்தியா திரைப்படத்திற்காக தயாரிப்பாளர் பூஷன் குமாருடன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் தயாரிப்பைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று, வசூலிலும் சாதனை படைத்த 'அமரன்' படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். இதனால் அவர் ரசிகர்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள அடுத்த படம் தொடர்பான அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு உள்ளனர். இதனிடையே, பெரிய அளவிலான திரைப்படங்களை தயாரிப்பவர் பூஷன் குமார். பாலிவுட்டில் பல திரைப்படங்களை தயாரித்துள்ள பூஷன் குமார் Hurun India Rich List 2022-ம் ஆண்டு பட்டியலில் ரூ.10,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் 175-வது இடத்தில் இடம்பிடித்தார்.
இதனால் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் பூஷண் குமார் இணையும் இப்படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.