• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஏலத்துக்கு வரும் அரச V8 சொகுசு வாகனங்கள்

இலங்கை

தமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அதிக கொள்ளளவு கொண்ட V8 சொகுசு வாகனங்களை ஏலம் விட்டு எதிர்வரும் மார்ச் 01 ஆம் திகதிக்குள் வருமான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், அரச நிறுவனங்கள் ஏலம் விடப்படும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2024 டிசம்பர் 03, அன்று, அனைத்து அரசு நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து ஆய்வு நடத்தவும், அரசு நிறுவனங்களில் அதிக பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவு ஏற்படும் அதி சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதன் மூலம் முறையாக அப்புறப்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அதன்படி, உயரும் பராமரிப்புச் செலவுகளுக்கு பங்களிக்கும் அதிக என்ஜின் திறன் கொண்ட வாகனங்களை மையமாக வைத்து, அரசு வாகனங்களை மதிப்பீடு செய்து சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply