• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிபர் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்

இலங்கை

தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் கோருவதற்காக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்ட அறிவிப்பு, பாடசாலைப் பதிவு, மதிப்பெண் நடைமுறை, மாதிரி விண்ணப்பப்படிவங்கள் என்பன கடந்த 11ஆம் திகதி கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி, இணையதளத்தில் உள்ள ‘சிறப்பு விளம்பரங்கள்’ பிரிவின் கீழ் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

Leave a Reply