வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
சினிமா
பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான இறை நூறு பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கார்த்திக் நேத்தா வரிகளில் மது பாலகிருஷ்ணன் பாடியுள்ளார். இப்பாடலில் அருண் விஜய்-க்கும் அவரின் தங்கைக்கும் உள்ள அன்பை பிரதிபளிக்கும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளது.