அடுத்த வாரம் பூஜையுடன் தொடங்கும் சிவகார்த்திகேயனின் BOSS
சினிமா
அமரன் படத்தை தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக சி.பி.சக்ரவர்த்தியுடன் இணைய உள்ளார் சிவகார்த்திகேயன்.
இதற்கு முன்னர் சிவகார்த்திகேயன் -சிபி சக்ரவர்த்தி கூட்டணியில் டான் படத்தில் தன்னுடைய எதிர்காலம் குறித்த புரிதல் இல்லாத கல்லூரி மாணவனின் கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பாஸ் என்ற படத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற இருந்த நிலையில் அதனை அடுத்த வாரத்திற்கு ஓத்திவைத்து படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும் சிவகார்த்திகேயன் இணைய உள்ளார்.