இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம் - இலங்கை வரவேற்பு
இலங்கை
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் லெபனான் மற்றும் பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.