உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு
இலங்கை
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்படி, உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 30, டிசம்பர் 2, 3 ஆம் திகதிகளில் நடைபெற மாட்டாது.
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று தினங்களுக்கு உயர் தரப் பரீட்சையை நடத்துவதில்லை என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
சீரற்ற காலநிலை தணிந்த போதிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட ஆறு நாட்களுக்கான உயர் தரப் பரீட்சை பாடங்கள் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து டிசம்பர் 21 முதல் டிசம்பர் 31 வரை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.