வழமைக்கு திரும்பியது ஏ-9 வீதி
இலங்கை
சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட யாழ்.ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஓமந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகாமையில் உள்ள வீதியும் ஓமந்த நகருக்கு அண்மித்த வீதியும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்திருந்தது
இன்னிலையில் இன்று ஏ-9 வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று வீதியில் பயணிக்க முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.