• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு

இலங்கை

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்த அடைமழை காரணமாக அட்டாளைச்சேனை பிரதேசத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் உள்ளனர்.

குறித்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவினை வழங்கும் வேலைத்திட்டமொன்றினை அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்னெடுத்துள்ளது.

குறித்த உணவானது அட்டாளைச்சேனை SMI நிறுவனத்தின் வளாகத்தில் சமைக்கப்பட்டு வருகிறது. மேற்படி இடத்துக்கு விஜயம் செய்த அட்டாளைச்சேனை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே. நௌபல் நிலமைகளை பார்வையிட்டதுடன் உணவு தயாரிப்பு பணிகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் முன்னெடுக்கப்படுவதனை உறுதிப்படுத்தினார்.

தனவந்தர்களின் உதவியுடன் அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலினால் சமைக்கப்படும் இந்த உணவானது பிரதேச செயலாளரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கிராம உத்தியோகத்தர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக பள்ளிவாசல் தலைவரும் விரிவுரையாளருமான ஏ.எல்.அனீஸ் தெரிவித்தார்.
 

Leave a Reply