• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே நெதன்யாகு விடுத்த எச்சரிக்கை

 போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து உள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்பந்த மீறலில் ஈடுபட்டாலோ, ஆயுதங்களை கையிலெடுக்க முற்பட்டாலோ நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

 ஓராண்டாக நீடிக்கும் போர்

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலை தொடர்ந்து ஓராண்டாக நீடிக்கும் பாலஸ்தீன இஸ்ரேல் மோதலில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

மோதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்துள நிலையில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது.

லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டு உள்ளார். லெபனானில் நடந்து வரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையும் ஒப்பு கொண்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் முழு புரிதலோடு, நாங்கள் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கான முழு சுதந்திரம் பெற்றிருக்கிறோம். ஒப்பந்த மீறலில் ஹிஸ்புல்லா ஈடுபட்டால், ஆயுதங்களை கையிலெடுக்க அவர்கள் முற்பட்டால், நாங்கள் தாக்குவோம்.

எல்லையருகே பயங்கரவாத கட்டமைப்பை எழுப்ப முயன்றால், நாங்கள் தாக்குவோம். ஒரு ராக்கெட்டை ஏவினாலும், சுரங்கம் ஒன்றை தோண்டினாலும், ராக்கெட்டுகளை சுமந்தபடி லாரியை கொண்டு வருகிறது என்றாலும் நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.   

Leave a Reply