• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மலையக மார்க்கமூடான இரவு அஞ்சல் ரயில்கள் இரத்து

இலங்கை

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக ரயில் பாதையின் இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகள் இன்று (27) இரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று இரவு கொழும்பு-கோட்டையிலிருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு-கோட்டைக்கு செல்லும் இரவு அஞ்சல் ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

மோசமான காலநிலை காரணமாக மலையக ரயில் பாதையில் பல்வேறு அனர்த்த சம்பவங்கள் பதிவாகியதன் காரணமாகவே இந்த ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இன்றும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply