போராட்டம் என்றால் மக்களுக்காக நான் முன்னிற்பேன்-ஹிருணிகா
சினிமா
தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றம் செல்வதற்கு எனது முன்மொழிவை வழங்கியுள்ளேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பெண் என்ற வகையில் தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றம் செல்வதற்கு நான் மிகவும் பொருத்தமான நபர் என நான் கருதுகின்றேன்.
கட்சியிலும், தலைவரிலும் எந்த மாற்றமும் ஏற்படாது, எதிர்காலத்தில் கட்சிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அத்தோடு, போராட்டங்களால் எங்களுக்கு வழக்குகள் மட்டுமே எஞ்சின, இருந்த போதிலும் மக்களுக்கு அநியாயம் நடக்கும் இடத்தில் நான் நிற்றேன்.
தற்போது ஜனாதிபதிக்கு தேவைக்கு அதிகமாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.அவர் சொன்னதை நிறைவேற்ற மக்கள் காத்திருக்கின்றனர்.
அன்றும், இன்றும், நாளையும், என்றும் கட்சிக்காக நான் இருப்பேன்.
மேலும் நான்கு தேர்தல்களுக்கு நாங்கள் முகங்கொடுத்தோம், நான்கு தேர்தல்களிலும் எங்களால் வெற்றிபெற முடியவில்லை. வெற்றி தோல்வி என்பது அரசியலின் இயல்பு.
2020ல் நான் தோல்வியுற்றேன் ஆனால் மக்கள் மீண்டும் ஹிருணிகாவை விரும்பினர். எதிர்காலத்தில் போராட்டம் என்றால் மக்களுக்காக நான் மீண்டும் முன்னிற்பேன் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை அதிகாரத்தை கவனமாக பயன்படுத்துவதாக ஜனாதிபதி கூறுகிறார், அது அவ்வாறு நடக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.