அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான விசேட அறிவிப்பு
இலங்கை
நாளை (21) காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில் பங்குபற்றவிருக்கும் எம்.பி.க்கள் அனைவரையும் காலை 9.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகைதருமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு வரும்போது உறுப்பினர்களின் வாகனங்கள் பொலிசாரால் அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்தலிடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்களின் கூடங்களில் நுழைவதுடன் வாக்கழைப்பு மணியோசை அடிக்கும்வரை அங்கு தங்கியிருத்தல் வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துணைவி அல்லது துணைவரோடு வருகின்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் நுழைவாயில் அருகில் இறங்க வேண்டும், மற்ற எல்லா உறுப்பினர்களும் உறுப்பினர்களின் நுழைவாயிலின் அருகில் இறங்க வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.