மன்னிப்பு இல்லாமல் இந்த மண்ணில் ஏதுமில்லை - கங்குவா வீடியோ பாடல் வெளியானது
சினிமா
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி நவம்பர் 14 ஆம் தேதி வெளியான படம் கங்குவா. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுக்க 38 மொழிகளில் அதிக திரைகளில் இந்தப் படம் வெளியானது. முன்னதாக கங்குவா படம் குறித்து படக்குழு பல்வேறு தகவல்களை தெரிவித்த நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியது.
இந்த நிலையில், கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தை பார்த்தவர்களில் பலர் படக்குழு எதிர்பார்த்த விமர்சனத்தை கொடுக்கவில்லை. ஒருசிலர் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர்.
கங்குவா திரைப்படம் மூன்று நாட்களில் 127 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள மன்னிப்பு பாடலின் வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பாடலில் சூர்யாவிற்கும் ஒரு சிறுமிக்கும் இடையே உள்ள பாசப் போராட்டத்தை பிரதிபளிக்கிறது.