பொதுத் தேர்தலின் பின்னர் ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் -சுனில் ஹந்துனெத்தி
இலங்கை
”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது நாட்டில் அரசியல் ஸ்திரதன்மையினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகின்றார் என தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்டத் தலைவர் சுனில்ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதியின் செயற்பாடுகளை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் ஸ்திரப்படுத்தலின் பின்னரே நாட்டில் பொருளாதார ஸ்திரதன்மை ஏற்படுத்தப்படும் எனவும், பொதுத்தேர்தலில் நாம் புதிதாக கொள்கைத் திட்டங்கள் எதனையும் முன்வைக்க தேவையில்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் பொதுத்தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்படும் எனவும், நாட்டில் அரசியல் ஸ்திரதன்மை பொருளாதார ஸ்திரதன்மை ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் ஊழல்மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் சுனில்ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
மேலும் ,சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும், ஜனாதிபதி தேர்தலில் தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தேவையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் எனவும் அதற்கான அதிகாரத்தினையே தாம் பொதுத்தேர்தலில் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.