கமல்ஹாசன் சார் கொடுக்குற அந்த Hug-க்காக வெயிட் பன்றேன் - சிவகார்த்திகேயனின் நெகிழ்ச்சி பேச்சு
சினிமா
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது இத்திரைப்படம்.
திரைப்படம் வெளியாகி 3 நாட்களில் உலகளவில் வசூலில் 100 கோடி ரூபாயை கடந்துள்ளது. இத்திரைப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமூகர்கள் பாராட்டி வருகின்றனர். படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. படத்தின் இயக்குனர், சாய் பல்லவி, சிவகார்த்திகேயன், மற்றும் படக்குழு அனைவரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது " அமரன் திரைப்படத்தில் வரும் கிலமாக்ஸ் காட்சி என்னுடைய வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட காட்சி அமைந்தது. என்னோட அப்பா இறந்து போகும் போது வீட்டில் அனைவரும் உடைந்து இருந்தனர். என் அப்பாவின் அஸ்தியில் இருக்கும் எழும்பை பார்க்கும் பொழுது நானும் உடைந்து போனேன். அடுத்து என்ன செய்ய போகிறேன் என தெரியாமல் நின்றுக் கொண்டு இருந்தேன். அப்படி நொறுங்கிப் போன ஒருவனை இன்று ஒட்ட வைத்து நிற்க வைத்துள்ளீர்கள். இன்று நான் சிவகார்த்திகேயன் ஆன வரவில்லை அமரன் கதாநாயகனாக வரவில்லை. என் அப்பா ஜி.தாஸ் என்கிற சின்சியரான காவல் அதிகாரியின் மகனாக இங்கு நிற்கிறேன். இன்று என் அப்பா இந்த திரைப்படத்தின் வெற்றியைப் பார்த்து மகிழ்வார் என்று நம்புகிறேன். படத்தின் கலெக்ஷன் 150 கோடி ரூபாய் தாண்டியது என கூறுகிறார்கள். படத்தின் வசூல் முக்கியம். தமிழ் சினிமாவிற்கு பெரிய பட்ஜெட் திரைப்படங்களை கொடுக்க ஆசைப்படுகிறேன். தமிழ் சினிமாவை உலக மக்கள் பார்க்க என்ன செய்ய வேண்டுமோ அதற்கு தொடர்ந்து உழைத்து முயற்சி செய்துக் கொண்டே இருப்பேன். நான் படத்தின் வசூலை இந்த படத்தின் , அந்த படத்தின் வசூலை தாண்டியது என போட்டியாக நான் பார்க்கவில்லை. சாய் பல்லவி ஒரு சிறந்த நடிகை. அவரின் நடிப்பு படத்தின் கடைசி 10 நிமிடம் பார்வையாளர்களை கட்டி ஈர்க்காமல் இருந்து இருந்தால் , நான் அதற்கு முன் நடித்த காட்சிகள் அனைத்தும் வீன். அதை சிறப்பாக அவர் செய்துள்ளார். இன்னும் பல விருதுகள் வாங்குவார் . அமரன் திரைப்படம் சாய் பல்லவிக்கு முதல் பெரிய கமெர்ஷியல் வெற்றிக் கொடுத்த திரைப்படமாக அமைந்துள்ளது. அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
கமல்ஹாசன் சார் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று உங்களுடன் கூற சொன்னார். திரைப்படம் நன்றாக போவது குறித்து அவருக்கும் பெரும் மகிழ்ச்சி.எனக்கு அமரன் திரைப்படத்தின் வெற்றி அங்கு இருந்து தொடங்கியது. அமெரிக்காவில் இருந்து அவர் திரும்பி வந்து என்னை கட்டிப்பிடிக்கும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்"