மேஜர் முகுந்த் ஒரு இந்தியன், தமிழன் அவருக்கு வேறு எந்த குறியீடும் தேவையில்லை - ராஜ்குமார் பெரியசாமி
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது இத்திரைப்படம்.
திரைப்படம் வெளியாகி 3 நாட்களில் உலகளவில் 100 கோடி ரூபாய் கடந்து வசூலித்துள்ளது. இத்திரைப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமூகர்கள் பாராட்டி வருகின்றனர். படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. படத்தின் இயக்குனர், சாய் பல்லவி, சிவகார்த்திகேயன், மற்றும் படக்குழு அனைவரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.
விழாவில் பேசிய ராஜ்குமார் பெரியசாமி "மேஜர் முகுந்த் தன்னை இந்தியர் என்று சொல்லிக்கவே ஆசைப்படுவார். தனது சான்றிதழில் கூட எந்த குறியீடும் இருக்ககூடாது என நினைப்பவர். எனவே அவருக்கு இந்தியன், தமிழன் என்ற அடையாளத்தை மட்டுமே இந்த படத்தில் கொடுங்கள் என அவரின் குடும்பத்தார் என்னிடம் கேட்டுக்கொண்டனர். இப்படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு மிகப்பெரிய நன்றிகள்." என கூறினார்