கடவுச்சீட்டினைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
இலங்கை
கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
எவ்வாறாயினும் தற்போது கையிருப்பில் உள்ள வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான டோக்கன் வழங்கப்படும் முறைமையானது எதிர்காலத்தில் இணையமூடாக மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாகவே நாடு முழுவதிலும் இருந்து வந்த பெருந்திரளான மக்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்குள்ளேயும் வெளியேயும் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு வரிசையில் காத்திருக்கின்ற போதிலும் நாளொன்றில் சுமார் ஆயிரம் கடவுச்சீட்டுகளை வழங்கப்படுவதுடன் தொடர்ந்தும் வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் எவ்வாறாயினும் தற்போது கையிருப்பில் உள்ள வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான டோக்கன் வழங்கப்படும் முறைமையானது எதிர்காலத்தில் இணையமூடாக மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டுக்கள் வரையறுக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் வழங்கப்படுவதனால் அத்தியாவசிய காரணிகளுக்கு மாத்திம் முன்னுரிமை வழங்கி கடவுச்சீட்டினை பெறுவதற்கு வருமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.