மலையக மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படவேண்டும்!- அனுஷா
இலங்கை
”மலையக மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படவேண்டும்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ கள நிலவரம் எமக்கு சாதகமாகவே உள்ளது. ஏனைய தேசிய கட்சிகள் எம் மக்களுக்கு செய்த சேவைகள் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. எம் மக்கள் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர்.
எம் மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படவேண்டும். போலியான வாக்குறுதிகளுக்கு செவிசாய்க்க எம் மக்கள் இனித் தயாராக இல்லை. மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.
ஒரு புதிய தேசியத் தலைவரான ரஞ்சன் ராமநாயக்கவை தெரிவு செய்யத் தயாராக உள்ளனர். ஒரு புதிய நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவுசெய்யவும் தயாராக இருக்கின்றனர்.
ஒரு பெண் பிரதிநிதி மலையகத்திற்கு அவசியம் என்பதையும் எம் மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர். பெண்களுக்காகவும், மலையகத்துக்காகவும் குரல் எழுப்ப மக்கள் என்னைத் தெரிவு செய்ய தயாராக இருக்கின்றனர்” இவ்வாறு அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.