நான் பொதுமக்களுக்காகவே தனிக் கட்சியை ஆரம்பித்தேன்
இலங்கை
”தான் பொது மக்கள் நலன்கருதியே தனிக் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளதாக” ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
களனி பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சில கட்சிகள் கூறுகின்றன. நாடாளுமன்ற ஆசனங்கள் அனைத்தையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று.
அப்படியென்றால், எதிர்க்கட்சியொன்று நாட்டுக்கு தேவையில்லையா?
ஏனைய கட்சிகளுக்கு நான் ஏன் செல்ல வில்லை என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.
நான் தான், இவர்கள் அனைவரும் திருடர்கள், இவர்கள் அனைவரும் நண்பர்கள் என்று முதலில் கூறியவன்.
இப்படி கூறிவிட்டு, அந்தக் கட்சிகளுடன் என்னால் இணைய முடியாது. அந்தக் கட்சிகளின் சலூன் கதவுகள் ஊடாக திருடர்கள் வந்துள்ளார்கள். இதனால்தான், விஜயகுமார துங்க போன்று தனிக் கட்சியொன்றை ஸ்தாபித்து பொது மக்களுக்காக களமிறங்கியுள்ளேன்” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.