• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுவிஸ் செய்தி தாளில் இலங்கைத் தமிழுக்கு கிடைத்த பெருமை

இலங்கை

சுவிற்சர்லாந்தில் உள்ள Coop என்ற வியாபார நிறுவனம் வாராந்தம் வெளியிடும் Coopzeitung என்ற இந்த வார பத்திரிகையில் 95 ஆம் பக்கத்தில் வெளிவந்த ஒரு பதிவு , இலங்கைத் தமிழர்கள் பெருமைப்படுவதாக அமைந்துள்ளது.

வாராந்தம் இந்த பகுதியில் யாராவது ஒரு கேள்வி கேட்பார்கள் அதற்கு பத்திரிகை ஆசிரியர் பதில் அளிப்பார், அதன்படி இந்த வாரம் உலகத்தில் பழமையான மொழி எது என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

உலகில் பழமையான மொழி எது? 

அதற்கு அவர்கள் அளித்த பதிலில், உலகில் மிகவும் பழமையான, இன்றும் பேசப்படுகின்ற மொழி என்று முதலாவதாக தமிழைத்தான் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

தமிழ், சீனம், அரபு, பேர்சி மற்றும் அரமேயம் ஆகிய மொழிகளை மிகவும் பழமையான மொழிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உலகப் படத்தில் தமிழ் பேசும் இடம் என்று நேரடியாக இலங்கையை தான் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் இங்கே ஐரோப்பாவில் இருந்து ஜேர்மன் மொழியில் வெளி வருகின்ற பத்திரிகையில் மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.     

Leave a Reply