• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதியின், மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்களுக்கு எதிராக செயற்பட மாட்டோம்- ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கை

”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என பிரதான எதிர்த்தரப்பான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட கருத்துத் தெரிவிக்கையில்” தற்போதைய ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களுக்கு எதிர்த்தரப்பினர் என்ற ரீதியில் நாம் ஒரு போதும் எதிராக செயற்பட மாட்டோம்.

அரசியல் கலாசாரம் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். அதற்கு நாம் ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில் ஒத்துழைப்பு வழங்குவோம்.ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கள்வர்களை கைது செய்வதாக கூறிய தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான தரப்பினர் ஆட்சிக்கு வந்தனர்.

எனவே தேர்தல்கால வாக்குறுதிகiளை ஜனாதிபதி தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.மக்களின் சொத்துக்களை கொள்ளையிட்டவர்கள் பாரபட்சமின்றி சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டும். அதற்கு நாம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம்.” இவ்வாறு பந்துலால் பண்டாரிகொட  தெரிவித்துள்ளார்.

இதே வேளை முன்னாள் ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த  இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் ” பலமிக்க எதிர்க்கட்சி ஒன்று அவசியமாகின்றது. மக்கள் பொருத்தமானவர்களை தெரிவு செய்வார்கள் நூற்றுக்கு 3 .5வீத வாக்குகளை பெற்றிருந்த அநுரகுமார திசாநாயக்க அவர்கள் 43 வீத வாக்குகளினால் நாட்டின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.

அதேபோல் 69 லட்சம் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 2.5 வாக்குகளையே பெற்றுக்கொண்டனர். இதனூடாக பலவிடயங்களை புரிந்து கொள்ளகூடியதாக இருக்கின்றது.

நாட்டின் எதிர்க்கட்சியை தெரிவு செய்வது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியினர் தாங்கள் இந்த நாட்டின் எதிர்க்கட்சியினர் என்றே எண்ணுகின்றனர். நாம் சிறந்த வேலைத்திட்டங்களுடன் தேர்தலில் முன்னிலையாவோம். நாட்டு மக்கள் இன்று அபிவிருத்தி சார்ந்த மாற்றங்களையே எதிர்ப்பார்க்கின்றனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply