• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

இலங்கை

அஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பிரதேசத்தில்  வயோதிப தம்பதியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அஹங்கம வெல்ஹேங்கொடபகுதியில்இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

அஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வெல்ஹேங்கொடபகுதியில் ரத்தக்காயங்களுடன் நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக   பொலிஸாருக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை  முன்னெடுத்திருந்த நிலையில்  குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வயோதிப தம்பதியர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்

67 வயதுடைய ஆணொருவரும் 63  வயதுடைய பெண்ணொருவரும்  உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்

சடலம்  பிரேத பிரசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது

சம்பவம் தொடர்பாக அஹங்க பொலிஸார்   மேலதிக விசாரணை முன்னெடுத்துள்ளனர
 

Leave a Reply