• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உங்களுக்கு டோபமைன்னா என்ன தெரியுமா? - Dopamaine @ 2.22 டிரைலர்

சினிமா

கடந்த மார்ச் மாதம் அறிமுக இயக்குனரான பாஸ்கல் வெப்பம் குளிர் மழை படத்தை இயக்கினார். ஹேஷ்டேக் FDFS நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில், திரவ் மற்றும் இஸ்மத் பானு ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாகி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார். திரைப்படம் வெளியாகி மக்களிடையேவும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து திரவ் அடுத்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஹேஷ்டேக் FDFS தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு டோபமைன் @ 2.22 என தலைப்பிட்டுள்ளனர்.

இப்படம் 7 வெவ்வேறு சூழலில் இருந்த வந்த நபர்கள் அவர்களின் வாழ்க்கை ஒரு நடக்கப் போகிற கொலையில் ஒன்று சேர்வது போலவும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது என படக்குழு கூறியுள்ளது.

படத்தில் திரவ், விஜய் டியூக், விபிதா, நிகிலா சங்கர், சத்யா, மற்றும் பலர் நடித்துள்ளனர். திரவ் இயக்கும் இப்படத்திற்கு அவரே படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளார். மொத்த படமும் சென்னையை சுற்றி 20 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் 20 ஆம் தேதி சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. படத்தில் 2.22 மணிக்கு ஒரு கொலை நடக்க போகிறது எனவும் இது டோபமைனின் எஃபக்டினால் இந்த கொலை நடக்கவிருக்கிறது என காட்சிகள் அமைந்துள்ளது. இந்த கொலை எதற்காக நடக்கவிருக்கிறது என சஸ்பென்ஸ் மிகுந்த டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Reply